News October 18, 2025

பட்டாசு வெடிக்கும்போது இது ரொம்ப முக்கியம் மக்களே

image

ஒவ்வொரு ஆண்டும், கவனக்குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பலருக்கு பட்டாசு தொடர்பான காயங்கள் ஏற்படுகின்றன. எனவே பட்டாசு வெடிக்கும் முன் இவற்றை பின்பற்றுவது முக்கியம்: *தரமான பட்டாசுகளை வாங்குவது *தீ எளிதில் பற்றும் மெல்லிசான ஆடைகளை தவிர்ப்பது *பெரியவர்கள் மேற்பார்வையில் குழந்தைகள் வெடிப்பது *வெடிக்காது பாட்டாசுகளை மீண்டும் வெடிக்க வைக்க கூடாது *வெடி வெடிக்க குறுகிய இடங்களை தவிர்ப்பது நல்லது.

Similar News

News October 18, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 18, ஐப்பசி 1 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சிறப்பு: மாதப்பிறப்பு, விஷு புண்ணிய காலம், மகா பிரதோஷம். ▶வழிபாடு: சிவன் கோயில்களில் விஷு தீர்த்தம், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல்.

News October 18, 2025

இந்தியா அமைதியாக இருக்காது: PM மோடி

image

கொரோனாவிற்கு பிறகு உலகம் முழுவதும் போர்கள், பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.8%ஆக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் எனவும், ஆபரேஷன் சிந்தூர், சர்ஜிகல் ஸ்டிரைக் என பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் ஏமாற்றம்

image

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்‌ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

error: Content is protected !!