News January 1, 2025
இன்றைய ஹாட் பிசினஸ் இதுதான்!

வருடத்தின் முதல் நாள், என்னோட உடம்ப இரும்பாக்குகிறேன் என்றே குறிக்கோளை வைத்து ஜிம்மில் அடியெடுத்து வைக்கும் கூட்டம் அதிகம். ஆனால், ஏனோ கொஞ்ச நாளில் அதை கைவிடுவார்கள். பொதுவாக கூறவில்லை, அப்படி சிலர் நமது குரூப்பிலும் இருப்பார்களே. இவர்களை வைத்து ஒரு பெரிய பிசினஸே இன்று பெரிய கல்லாக்கட்டுகிறது. இவர்களை குறிவைத்து சில ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்று ஹாட் பிசினஸ் இதுதான்.
Similar News
News November 21, 2025
ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவு

தமிழ்நாட்டில் நேற்று (20-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 95.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ் வெயில் (95.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
News November 21, 2025
பிஹார் பாணியில் TN-ல் கூட்டணி ஆட்சி: கிருஷ்ணசாமி

தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் பிஹாரை பார்த்து பாடம் கற்க வேண்டும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியும், பூரண மதுவிலக்கும் தான் 2026 தேர்தலில் முக்கியமானதாக இருக்கும்; ஒரு கட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்டினால் தான் விடிவு காலம் பிறக்கும்; கூட்டணி ஆட்சி, மதுவிலக்கு என வெளிப்படையாக அறிவிக்கும் கட்சியுடன் தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
தக்காளி, முருங்கை, வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு!

சத்தமில்லாமல் சாம்பார் வெங்காயம், தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் உயர்வை கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இம்மாத தொடக்கத்தில் ₹50-க்கு விற்பனையான 1 கிலோ முருங்கை ₹200 ஆக உயர்ந்துள்ளது. தக்காளி, சாம்பார் வெங்காயம் 1 கிலோ ₹50 – ₹70-க்கும், மழை காரணமாக வரத்து குறைந்ததால் வரும் நாள்களில் காய்கறிகள் மேலும் உயர வாய்ப்புள்ளது.


