News November 20, 2024
மக்கள் வாழ இதுதான் வழி: சீமான்

திமுக ஆட்சியை அகற்றுவதே, மக்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தஞ்சை, ஓசூர் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு ஊழியர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
சுபாஷ் சந்திர போஸ் பொன்மொழிகள்

*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
* வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.
News August 15, 2025
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் நடிகை கைது

கேரளாவை சேர்ந்தவர் நடிகை மினு முனிர். இவர் தமிழிலும் சொற்பமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விடுதியில் 4 பேரை அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரில் தற்போது அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.
News August 15, 2025
தொடர் தோல்வியால் அதிரடி மாற்றத்தில் இறங்கிய LSG

IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.