News October 2, 2025

பைசன் படத்தின் கதை இதுதான்: மாரி செல்வராஜ்

image

‘பைசன்’ படம் கபாடி வீரர் மணத்தி கணேசனின் கதையும், தன் கதையும், தென்தமிழகத்து இளைஞர்களின் கதையும் சேர்ந்தது என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும், இந்த படத்தை மக்கள் பார்க்கும்போது ஒன்று நடக்கும் என நம்புவதாகவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். இப்படம் அக்.17-ல் ரிலீஸாகவுள்ளது.

Similar News

News October 2, 2025

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் டிரம்ப்

image

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் 4 வாரங்களில் நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க விவசாயிகள் பிரச்னை குறித்து பேசப்படும் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களை வாங்க, சீனா மறுப்பதால் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். வரி விதிப்பால் கிடைத்த பணத்தில் விவசாயிகளுக்கு உதவுவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

News October 2, 2025

மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

ஓபிஎஸ் அணியை சேர்ந்த புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் (2016 ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்) இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல், OPS அணியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட அவை தலைவர் ராமையா, மாவட்ட இணை செயலாளர் பரிமளா உள்ளிட்டோரும், திமுக, காங்., அமமுகவை சேர்ந்த பலரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

News October 2, 2025

POK துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

image

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற <<17886965>>போராட்டத்தின்போது<<>> நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 3 போலீசாரும் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!