News October 23, 2024
‘தளபதி 69’ கதை இதுதானாம்..!

‘தளபதி 69’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பிரச்னை காரணமாக காவல்துறையில் இருந்து வெளியேறும் விஜய், முக்கிய கேஸ் காரணமாக மீண்டும் போலீஸில் இணைந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வகையில் கதை பிண்ணப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும் போது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Similar News
News November 20, 2025
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் அதிமுக

கேரளாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளது. கேரளாவில் அடுத்த மாதம் 9, 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், இடுக்கி, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளது. இதற்காக முதற்கட்டமாக 28 வேட்பாளர்களையும் EPS அறிவித்துள்ளார்.
News November 20, 2025
சற்றுமுன்: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் 1 அவுன்ஸ்(28g) $4,000-க்கு கீழ் சென்றது. இதனால், நம்மூர் சந்தையிலும் விலை மளமளவென குறைந்து வந்தது. இதனிடையே, நேற்றும், இன்றும் உயர்வை கண்டுள்ளது. தற்போது $39 உயர்ந்து, $4,105 ஆக உள்ளது. இதே நிலை நீடித்தால், <<18331084>>நேற்று போலவே,<<>> இன்றும் நம்மூர் சந்தையில் தங்கம் விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
சிறப்பு TET தேர்வு அறிவிப்பு வாபஸ்

SC உத்தரவு படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு 2026 ஜனவரியில் நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை தனது இணையதளத்தில் இருந்து நீக்கி, TRB வாபஸ் பெற்றுள்ளது. அறிவிப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், அவை களையப்பட்டு, விரைவில் <<18329505>>TET<<>> தேர்வுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் TRB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


