News March 20, 2024

வெட்கமில்லாதவரின் பேச்சு இது!

image

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர், “மூப்பனார் மகன் வாசன், ராமதாஸ் மகன் அன்புமணி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், குமரி ஆனந்தன் மகள் தமிழிசையை மேடையில் வைத்துக் கொண்டு வாரிய அரசியலை ஒழிப்போம் என மோடி பேசுவது அவரது நேர்மைக்கான எடுத்துக்காட்டு” எனக் கூறியுள்ளார். மேலும், வெட்கமே இல்லாத ஒருவர் தான் இப்படி பேசுவார் எனவும் சாடியுள்ளார்.

Similar News

News February 3, 2026

‘$500 பில்லியன்’ US பொருள்களை வாங்கும் இந்தியா

image

அமெரிக்க பொருள்களை அதிகளவில் வாங்க PM மோடி ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்று <<19035190>>இந்திய பொருள்கள்<<>> மீதான வரியை 18% ஆக டிரம்ப் குறைத்தார். இதனிடையே, 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்து தொழில்நுட்ப, விவசாயம், நிலக்கரி பொருள்களை இந்தியா வாங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

அப்பா இறந்துவிட்டார்.. கார் ஓட்டுநரின் பலே மோசடி

image

பிறரின் அனுதாபத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் கொள்ளையடித்த சென்னை கார் டிரைவர் வசமாக சிக்கினார். கார் பயணத்தின் போது அந்நபரின் போனில், உன் அப்பா இறந்துவிட்டார்; பணம் தேவைப்படுகிறது என வாய்ஸ் ஒலித்துள்ளது. செய்வதறியாமல் அவர் நடிப்பதை நம்பி ஒவ்வொரு பயணியும் ₹10000, ₹20000 தந்து உதவியுள்ளனர். இவரது நாடகத்தை கண்டுபிடித்த வக்கில் ஒருவர் போலீசில் புகாரளித்திட, குற்றத்தை கார் ஓட்டுநர் ஒப்புக்கொண்டார்.

News February 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 3, தை 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

error: Content is protected !!