News September 4, 2025

ஹீரோயின்களுக்கு இதுதான் நிலை: தனுஷ் பட நடிகை

image

ஹிந்தியில் தனுஷுடன் இணைந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் நடித்து வரும் கீர்த்தி சனோன், பாலிவுட்டில் நடிகர்களின் ராஜ்ஜியம் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஷூட்டிங்கில் நடிகர் வருகைக்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், நடிகர்களை விழுந்து விழுந்து கவனிக்கும் தயாரிப்பாளர்கள், நடிகைகளை கண்டுகொள்வதே கிடையாது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Similar News

News January 20, 2026

30+ ஆண்களே.. இத கவனியுங்க!

image

ஆண்களுக்கும் Skin Care அவசியம். அதிலும் 30 வயதை கடந்த ஆண்கள் சிலவற்றை பின்பற்றாமல் போனால் இளமையில் வயதானவர்கள் போல தோற்றமளிப்பீர்கள். எனவே, என்றென்றும் இளமையாக தோற்றமளிக்க இந்த 4 விஷயங்களை பின்பற்றுங்கள். ➤மைல்டான க்ளன்சரை பயன்படுத்துங்கள் ➤மாய்ஸ்சரைசர், சன் ஸ்கிரீன் மிக மிக முக்கியம் ➤ரெட்டினால் இருக்கும் சீரமை யூஸ் பண்ணுங்க ➤உடற்பயிற்சியும் செய்யவேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News January 20, 2026

தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா?

image

தேர்தலுக்கு முன்பே கட்சி மாற <<18903913>>KAS<<>> திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது உண்மைக்கு மாறான செய்தி என செங்கோட்டையன் தனது X பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு சோதனை ஏற்பட்ட போது, தனது கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைக்கின்ற அளவிற்கு இன்று தன்னை விஜய் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ல் விஜய்யை CM ஆக்குவதற்கு ஒற்றுமையுடன் உழைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 20, 2026

SIR நடவடிக்கையால் யாருக்கும் பாதிப்பில்லை: முகமது ஷமி

image

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் SIR படிவத்தில் இருந்த குளறுபடி காரணமாக அவரை தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆஜராக அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி கொல்கத்தாவில் ECI அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களை அவர் நேரில் சமர்பித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஷமி, SIR பணிகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், இது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!