News August 14, 2024
லாரன்ஸ் நடிக்காததற்கு இதுதான் காரணம்

விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘படை தலைவன்’ படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த இயக்குநர் அன்பு, லாரன்ஸ் மீது எந்த தவறும் இல்லை என்றார். லாரன்ஸின் கதாபாத்திரம் கனமான கதாபாத்திரமாக இருக்குமா என தனக்கு சந்தேகம் இருந்ததாலேயே, அவரை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 28, 2025
திருப்பத்தூர்: பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக பாட்டிக்கு விபூதி!

திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி வசந்தா (66), கட்டிட தொழிலாளி. இவரது பேரன் பிரசாந்த் (20) என்பவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பேரனுக்கு வேலை வாங்கி தருவதாக வேப்பல்நத்தம் பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவர் 5 பவுன் நகையை வசந்தாவிடம் பெற்றுக்கொண்டு டிமிக்கி காட்டியுள்ளார். புகாரின் பேரில் பிரவீன் கைது செய்யப்பட்டார்.
News November 28, 2025
தேர்வு இல்லாமல் மத்திய அரசில் 156 வேலைவாய்ப்பு!

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் ஃபிட்டர், உள்ளிட்ட 156 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: ITI. மார்க் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.8. இங்கே <
News November 28, 2025
லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனா?

லோகேஷிடம் கதை கேட்ட அல்லு அர்ஜூன், அக்கதை பிடித்துப்போக ஸ்கிரிப்ட் வேலைகளை உடனே தொடங்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு, தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதேநேரம், ‘கூலி’ பட தோல்விக்கு பிறகு ‘DC’ படத்தில் நடித்து வரும் லோகேஷ், ‘கைதி 2’ படத்தை இயக்கும் முனைப்பில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் – அல்லு அர்ஜுன் காம்போ எப்படி இருக்கும்?


