News April 14, 2024
தோனியை ‘தல’ என்று அழைக்க இதுதான் காரணம்!

CSK அணி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட முக்கிய காரணமாக இருப்பதால் தான் தோனியை எல்லோரும் ‘தல’ என அழைக்கின்றனர் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். தோனி குறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் பல நாடுகளில் இருந்து வரும் வீரர்களில் சிலர் விளையாடுவர், சிலர் பெஞ்சில் அமருவர். அவர்கள் அனைவரையும் டீமாக ஒன்றிணைத்தால் தான் கோப்பையை வெல்ல முடியும். இதனை செய்யக்கூடிய திறன் அவரிடம் உள்ளது” எனக் கூறினார்.
Similar News
News December 17, 2025
செங்கல்பட்டு: இனி வரி செலுத்துவது ஈஸி!

செங்கல்பட்டு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 17, 2025
தவெகவில் இணைந்தனர்.. கொங்குவில் அடுத்த விக்கெட்

செங்கோட்டையன் வருகைக்கு பிறகு, திமுக, அதிமுகவுக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தை தவெக வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு உள்பட அமமுகவினர், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். ஈரோட்டில் நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும், மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
தமிழகம் கேட்டது… மத்திய அரசு தந்தது: CM

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு கேட்ட நிதியில் (₹24,670 கோடி), வெறும் 17%-ஐ (₹4,130 கோடி) மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான நிர்வாக குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு வென்றதுபோல, காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று குறிப்பிட்டார்.


