News April 21, 2024
வாக்கு சதவீதம் மாறுபட இதுதான் காரணம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது. அதனால், இறுதித் தகவலில் வேறுபாடு ஏற்பட்டதாகவும், குளறுபடி எதுவும் நடைபெறவில்லை எனவும் விளக்கமளித்தார்.
Similar News
News February 3, 2026
இளம் வீரனை இழந்தது இந்தியா!

தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் சேவையாற்றிய ஒரு குடும்பம், தனது இளம் தலைமுறையை இழந்து நிற்கிறது. சிலிகுரியில் பணியில் இருந்த அக்னி வீரர் கரண் சிங், இன்று வீரமரணம் அடைந்துள்ளார். இவரது தந்தை, 2 மாமாக்கள், அக்கா ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். கரண் சிங்கின் மறைவால் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வீரனின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நாளை நடைபெற உள்ளது.
News February 3, 2026
சென்சார் போர்டு தேவையே இல்லை: சுமன்

சென்சார் போர்டு இருப்பதே இப்போது தேவையில்லாதது என நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவை மட்டும் தான் பார்த்தார்கள் என்ற அவர், ஆனால் இன்று செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றனர் எனவும், ஆபாசமும் வன்முறையும் அதிகம் உள்ள வெப்சீரிஸுக்கு சென்சாரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல், ஓடிடி என அனைத்துக்கும் சென்சார் வேண்டும். இல்லையென்றால் அது தேவையே இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 3, 2026
பனிமூட்டம்.. இந்த 7 மாவட்ட மக்களே உஷார்

தமிழகத்தில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்வதை முடிந்தளவு தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் உள்ளதா நண்பர்களே?


