News March 17, 2025
அதிமுக பிளவுக்கு இதுதான் காரணம்: மருது அழகுராஜ்

அதிமுகவுக்கு சர்வாதிகார ஜனநாயகம் தான் சரியாக வரும் என நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைமை இல்லாததுதான், இப்படியான பிளவுகளுக்கு காரணம் என மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
Similar News
News March 17, 2025
திமுகவுடன் கூட்டணியா?- உடைத்து பேசிய பிரேமலதா!

தமிழக பட்ஜெட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வரவேற்பு தெரிவித்ததால் திமுகவுடன் கூட்டணி சேர திட்டமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், தேர்தல் வருவதற்குள் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பிரேமலதா குறிப்பிட்டுள்ளார்.
News March 17, 2025
வங்கி சேவைகள் 4 நாள்கள் முடங்கும் அபாயம்!

வாரத்தில் 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இதற்கு முந்தைய 2 நாள்கள் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமையாக உள்ளன. இதனால், 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், பொதுமக்கள் தங்களது வங்கி பணியை வரும் 22ம் தேதியே முடித்துக் கொள்வது நல்லது.
News March 17, 2025
சாலை விபத்தில் கேரள பாடகர் பலி

கேரளாவில் பாடப்படும் முஸ்லிம் நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாக கொண்டது மாப்பிளாப்பாட்டு பாடல். இப்பாடலை பாடி புகழ்பெற்றவர் பைஜாஸ் உலியில். புன்னாட்டில் காரில் அவர் நேற்றிரவு பயணித்தபோது, எதிரே வந்த காரில் மோதி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த பைஜாஸ் உலியில், ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர்.