News March 30, 2025
சாய் பல்லவியின் எனர்ஜிக்கு காரணம் இதுதான்!

தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் சாய் பல்லவி, தனது சிம்பிளான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரௌடி பேபி உள்ளிட்ட பாடல்களில் அதிக எனர்ஜியுடன் நடனமாடி அவர் அசத்தி இருப்பார். தினமும் தவறாமல் 2 லிட்டர் இளநீர் குடிப்பதே, அவரது எனர்ஜியின் ரகசியமாம். மேலும், தன்னுடைய டயட்டில் அதிகப்படியான காய்கறிகள் மற்றும் பழங்களை அவர் சேர்த்துக் கொள்கிறாராம்.
Similar News
News April 1, 2025
2 கோடி இன்சுரன்ஸ் போச்சே!! செட்டப் விபத்து…

டெல்லியில் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ₹2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை உட்பட 3 பேர் கைதாகினர். சதிஷ் குமார் என்பவர் பைக் விபத்தில் தனது மகனுக்கு காயம் ஏற்பட்டதாக காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். பின்னர் சில நாட்களிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து விபத்து நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அது செட்டப் செய்யப்பட்ட விபத்து என தெரியவந்தது.
News April 1, 2025
காலையில் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் செல்கிறதா?

இரவு முழுவதும் தண்ணீர் குடிக்காமல் இருப்பதுதான் காலையில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறுவதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இரவில் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகச் சிறுநீர் அடர் நிறமாக மாறுகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீர் அடர் நிறமாக மாறக்கூடும். இதனால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
News April 1, 2025
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு பேரவை கூடுகிறது!

3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கவுள்ளது. காலை 9.30 மணிக்குப் பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெறும். இந்த விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசுவர். இதற்குப் பதில் அளித்து, துறை அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.