News March 16, 2025
அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம்: லிங்குசாமி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து இயக்குநர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். படத்தின் டப்பிங்கிற்காக 50 தடவை பேசச் சொன்னாலும் அஜித் பேசுவார் என அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் வெற்றிக்கும், தமிழ் சினிமாவில் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கும் அதுவே காரணம் என லிங்குசாமி தெரிவித்துள்ளார். அஜித்தின் ஜீ படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார்.
Similar News
News March 17, 2025
பக்தர் பலி: டிடிவி கண்டனம்

திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயர சம்பவம் நிகழ, இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்க முறையாகத் திட்டமிட வேண்டும் என திமுக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
News March 17, 2025
முருங்கைப் பூவின் முத்தான மருத்துவ குணங்கள்!

*முருங்கைப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
*முருங்கைப் பூ உடல் வலிக்கு நிவாரணம் தரும்.
*மன அழுத்தம், மனச்சோர்வை குறைக்கும் வல்லமை கொண்டது.
*தாது பலனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
*மாதவிடாய் பிரச்னைகளை தணிக்கும்
*நோய் எதிர்ப்பு மண்டலத்தை முருங்கைப் பூ பலப்படுத்தும்.
News March 17, 2025
சமந்தா தயாரித்த படம் ரிலீஸுக்கு ரெடி

சமந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுபம்’ படம், ரிலீஸுக்கு தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இவர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் படம் ரிலீஸாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.