News December 29, 2024
‘SK 25’ல் நடிக்க இதுதான் காரணம்: அதர்வா

சுதா கொங்கராவின் நட்பு காரணமாகவே ‘SK 25’ல் நடிக்க ஒப்புக் கொண்டதாக அதர்வா தெரிவித்துள்ளார். ‘பரதேசி’ படத்தில் பணியாற்றிய போது நட்பு ஏற்பட்டதாகவும், இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவோம் என சுதா முன்பே தெரிவித்து இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ‘SK 25’ படத்தில் வழங்கப்பட்டுள்ள கேரக்டர், சினிமாவில் தனக்கு திருப்புமுனையை தரக்கூடியதாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூலை தமிழக அரசு தடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் எச்சரித்தும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ₹5 முதல் ₹15 லட்சம் வரை கூடுதலாக தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்கள் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் சிக்கல் ஏற்படுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
News September 13, 2025
ஆசிய கோப்பையில் இன்று Ban Vs SL

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று குரூப் பி-ல் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், களத்தில் யுக்திகளை சரியாக செயல்படுத்தும் அணியே வெற்றி பெறும். ஏற்கெனவே ஹாங்காங்கை வீழ்த்திய வங்கதேசம், இப்போட்டியில் வென்றால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். Head to Head = 20 போட்டிகள், வெற்றி = SL 12, Ban 8.
News September 13, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க