News May 28, 2024
இதுதான் பிரகாஷ் ராஜின் அரசியல் அனுபவம்

கடந்த சில மாதங்களாகவே நடிகர் பிரகாஷ் ராஜ் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் ராஜின் செயல்பாடு குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெங்களூருவில் போட்டியிட்டு டெபாசிட் இழந்ததுதான் நடிகர் பிரகாஷ் ராஜின் அரசியல் அனுபவம். பிரதமர் மோடியைத் திட்டும் வேலையை மட்டுமே செய்யும் அவரை பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றார்.
Similar News
News March 3, 2026
CSK-வின் பவுலிங் கோச் அஸ்வினா?

சென்னை அணியில் தனது IPL பயணத்தை தொடங்கிய அஸ்வின் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், CSK நிர்வாகம் அஸ்வினின் போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு, யார் என்று கண்டுபிடியுங்கள் என கேட்டுள்ளது. இதனால் அவர் CSK-வின் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட இருக்கலாம் என்ற செய்தி தீ போல் பரவி வருகிறது. முன்னதாக CSK அகடாமியின் முக்கிய பொறுப்பில் அவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 3, 2026
ராஜ்யசபா MP ஆகிறார் பாஜக தேசிய தலைவர் நிதின்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை ராஜ்யசபா உறுப்பினராக அக்கட்சி பரிந்துரைத்துள்ளது. பிஹாரில் இருந்து அவர் தேர்வாக உள்ளார். தற்போது அம்மாநிலத்தில் பன்கிபூர் தொகுதி MLA-வாக உள்ள நபினின் கவனத்தை முழுமையாக டெல்லிக்கு மாற்றவே அவருக்கு ராஜ்யசபா சீட்டை கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதாம். 2006-ல் இருந்து தொடர்ந்து 6 முறை MLA-வாக இருந்த அவர், முதல்முறையாக MP ஆகவுள்ளார்.
News March 3, 2026
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தொடங்கியது

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கியுள்ளது. மாலை 6:48 மணி வரை கிரகணம் நீடிக்கும். இந்திய நேரப்படி, மாலை 4:34 மணிக்கு நிலவு முழுமையாக மறையும். இந்தியாவில் பகலாக இருப்பதால், மாலை 6:26 மணி முதல் 6.40 வரை சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் காண முடியும். 6 மணிக்கு மேல் தயாரா இருங்க! SHARE IT


