News June 4, 2024
இது நமக்கு சரியான பாடம்: இபிஎஸ்

அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு தேர்தல் முடிவு சாதகமாக வந்திருப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது எனக் கூறி, “சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா” என்ற நீலமலைத் திருடன் திரைப்படத்தின் பாடல் வரியை சுட்டிக்காட்டியுள்ளார்.
Similar News
News March 7, 2026
விஜய்யும், கூட்டணி லாஜிக்கும்.. திருமா ரியாக்ஷன்

விஜய் கட்சி தொடங்கும் முன்பே, மெகா கூட்டணியை திமுக உருவாக்கியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் மீது உள்ள பயத்தின் காரணமாகவே, திமுக அதிக கட்சிகளை கூட்டணியில் சேர்த்துள்ளதாக கூறுபவர்கள் தான் பதற்றத்திலும், பயத்திலும் உள்ளதாக அவர் பேசியுள்ளார். மேலும், விஜய் வந்த பின், திமுக கூட்டணி உருவானது எனக் கூறுவது அரசியல் அறியாமை, உளறல்; அதில் எந்த பொருளும் இல்லை எனக் கூறினார்.
News March 7, 2026
மார்ச் 7: வரலாற்றில் இன்று

*1919 – நடிகர் நம்பியார் பிறந்தநாள் *1945 – பாடகர் சங்கரநாராயணன் பிறந்தநாள் *1949 – அரசியல்வாதி குலாம் நபி ஆசாத் பிறந்தநாள் *1952 – VIV ரிச்சர்ட்ஸ் பிறந்தநாள் *1960 – இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்தநாள் *2006 – வாரணாசியில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொலை *2014 – நகைச்சுவை நடிகர் பாலாஜி மறைந்த நாள் *2020 – அரசியல்வாதி க.அன்பழகன் மறைந்த நாள்
News March 7, 2026
ஈரானில் மொசாட் உளவாளி கொலை?

ஈரானின் QUDS படை தலைவர் இஸ்மாயில் கானியை அந்நாட்டின் புரட்சிகர காவல் படை கொன்றுவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அவர் மொசாட்டுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒவ்வொரு முறையும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, 2024 டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் Haniyeh இருந்த ரகசிய இடத்தில் அவர் காட்டிக்கொடுத்ததால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.


