News April 14, 2024
இதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம்

2024 மக்களவைத் தேர்தலை I.N.D.I.A கூட்டணிக்கும் என்.டி.ஏ-வுக்கும் இடையில் நடக்கும் போராக தான் பார்ப்பதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். ஸ்ரீநகரில் பேசிய அவர், “இந்தப் போர் ஒரு தனிநபருக்கு எதிரானதல்ல, பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரானது. பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம். அதற்கு முடிந்த பங்களிப்பைச் செய்வோம்” என்றார்.
Similar News
News October 19, 2025
Women’s WC: இந்திய அணி பவுலிங்

மகளிர் உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்யவுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெல்வது அவசியமாகும். நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு 3-வது அணியாக முன்னேறும். இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதில் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
News October 19, 2025
IRCTC-ல் டிக்கெட் புக் செய்பவர்களின் கவனத்திற்கு!

பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்வதால் சில நேரங்களில் IRCTC-யின் சர்வர் டவுன் ஆகிவிடுகிறது. இதனால் சில சமயங்களில் டிக்கெட் புக் ஆகாமல் பணம் டெபிட் ஆகிவிடுகிறது. இதற்கான ரீஃபண்ட் 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை எனில், care@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
24 வயது பெண்ணை திருமணம் செய்த 74 வயது தாத்தா ❤️❤️

₹1.8 கோடி பணம் கொடுத்து தன்னை விட 50 வயது குறைந்த பெண்ணை இந்தோனேசியாவைச் சேர்ந்த தார்மன்(74) திருமணம் செய்துள்ளார். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, போட்டோகிராபருக்கு பணம் தராமல் மாப்பிள்ளை தப்பியோடி விட்டார் என புகார் எழுந்தது. மேலும், மணப்பெண்ணுக்கு அளித்த செக்கும் போலியானதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, தாங்கள் ஹனிமூனில் இருப்பதாக தார்மன் தெரிவித்துள்ளார்.