News January 7, 2025
இவர்தான் உலகின் மிக மூத்த நபர்!

பிரேசிலை சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கானபரோ தான், தற்போது உலகின் மிக வயதான நபராம். 117 வயதாகும் இவருக்கு கால்பந்து என்றால் உயிர். சிறுவயதில் மிகவும் மெலிந்து இருப்பதை பார்த்து, இவர் குழந்தைப் பருவத்தையே தாண்ட மாட்டார் எனக் கணிக்கப்பட்டவர், உலகின் மிக மூத்த மனிதராக வாழ்ந்து வருகிறார். முன்னதாக மூத்த நபராக இருந்த ஜப்பானை சேர்ந்த பெண்- டோமிகோ இடூகா, டிச.29 அன்று மறைந்தார்.
Similar News
News January 17, 2026
டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.
News January 17, 2026
மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை: அன்புமணி

TN-ல் பொங்கல், போகி நாள்களில், டாஸ்மாக் வாயிலாக <<18876139>>₹518 கோடிக்கு<<>> மது விற்பனையானது. இதை சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, மக்கள் நலனுக்காக துரும்பை கூட அசைக்காத திமுக அரசு, ஆண்டுக்கு ஆண்டு மக்களை மேலும் குடிகாரர்களாக்கி, மது வணிகத்தை பெருக்குவதில் தான் சாதனை படைத்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது சாதனை அல்ல, வேதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு மதுவிலக்கை நோக்கி பயணிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
News January 17, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


