News July 3, 2024
இது மோடி அரசின் கேரண்டி!

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை போன்ற விசாரணை ஏஜென்சிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையும் காட்டக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம் எனக் கூறிய அவர், விசாரணைகளில் அரசு ஒருபோதும் தலையிடாது என்றார். அத்துடன், ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது மோடி அரசின் கேரண்டி எனத் தெரிவித்தார்.
Similar News
News November 19, 2025
மாவட்ட ஆட்சியர் படிவங்களை பெற்றுக் கொண்டார்

ஆர்க்காடு நகராட்சி கங்கையம்மன் கோயில் தெருவில் வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (நவ.18) தேதி பெற்றுக்கொண்டார். வாக்காளர்களுக்கு தீவிர சிறப்பு சுருக்க திருத்த படிவங்கள் வழங்கப்பட்டு அதை திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரே என்று வாக்காளரிடமிருந்து படிவங்கள் பெற்றுக் கொண்டார்.
News November 19, 2025
ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஹர்லீன் தியோல்

உலகக்கோப்பை வென்ற மகளிர் அணியில் முக்கிய வீராங்கனையாக திகழ்ந்தவர் ஹர்லீன் தியோல். இவர் மைதானத்தில் மட்டும் அல்ல இன்ஸ்டாகிராமிலும் அசத்தி வருகிறார். நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு இவர் போடும் போட்டோஸ்களுக்கு லைக்குகள் குவிகின்றன. PM மோடியிடமே உங்கள் பிராகாசத்துக்கு என்ன காரணம் என கேட்டு, வெட்கப்பட வைத்த ஹர்லீனின் அழகின் ரகசியம் என்ன என நெட்டிசன்கள் கேட்கின்றனர்.
News November 19, 2025
BREAKING: சற்று நேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

கோவை, கொடிசியா வளாகத்தில் இன்று(நவ.19) நடைபெறும் வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைக்கிறார். தொடந்து, PM கிசான் திட்டத்தின், 21-வது தவணையாக ₹18,000 கோடி உதவித்தொகையை 9 கோடி விவசாயிகளுக்கு வழங்க உள்ளார். இத்திட்டத்தில் தமிழகத்தில் மட்டும் 21,80,204 விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேலும், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு PM மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார்.


