News May 10, 2024

தரம்சாலா மைதானத்தில் இதுவே அதிகபட்ச ரன்

image

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 241/7 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் RCB பல சாதனைகளை படைத்துள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் RCB அணி அடிக்கும் நான்காவது அதிகபட்ச ரன்னாகும். அதுமட்டுமின்றி தரம்சாலா மைதானத்தில் ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும். இப்போட்டியில் RCB அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 25, 2025

மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் புதிய திட்டம்

image

வாக்காளர் பட்டியலில் இருந்து முறைகேடாக பெயர் நீக்கத்தை தடுக்க புதிய நடைமுறையை ECI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இனி ஒருவர் பெயர் நீக்கத்திற்கு மனு அளித்தால், அதுதொடர்பாக அவர்களின் செல்போன் எண்ணுக்கு OTP செல்லுமாம். அதை பதிவிட்ட பிறகே வாக்காளரின் பெயர் நீக்கம் செய்யப்படுமாம். வெளிமாநிலத்தில் இருந்து வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 25, 2025

காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?

image

காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

News September 25, 2025

‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறா?

image

‘மெய்யழகன்’படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், படம் வெளியான சமயத்தில் பல எதிர்மறை விமர்சனங்களும் வந்தன. இந்நிலையில், ‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குநர் பிரேம் குமார் கூறி இருக்கிறார். மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள் என தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மெய்யழகன் படம் பிடிக்குமா?

error: Content is protected !!