News October 19, 2025
ருக்மணியை கவர்ந்த ஹீரோ இவர்தான்!

‘காந்தாரா : சாப்டர் 1’ படம் மூலமாக பான் இந்திய நடிகையான ருக்மணி வசந்த் உருவெடுத்துள்ளார். நேஷனல் கிரஷ் என பலரும் அவரை வர்ணித்து வருகின்றனர். இந்நிலையில், அவரை கவர்ந்த ஃபேவரிட் ஹீரோ தெலுங்கு நடிகர் நானி என கூறியுள்ளார். நானியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும் எனவும், அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் ருக்மணி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
தேர்தல் தேதி அறிவித்தவுடன் அமலாகும் நடத்தை விதிகள்!

*தேர்தல் முடியும் வரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கக் கூடாது. *பிரசாரத்தின் போது கட்சிகளுடைய செயல்பாடுகளை தவிர்த்து தனிநபர் விமர்சனம் செய்யக் கூடாது. *தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் கூடாது. *அரசு விழாக்கள் நடத்தக் கூடாது, *கட்சி பாகுபாடின்றி பொது மைதானங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.
News March 15, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகல்? கடைசி நேரத்தில் ஷாக்

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தவாகவுக்கு 3 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுள்ளார். ஆனால், திமுகவோ ஒரு தொகுதிதான் தர முடியும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என கறாராக கூறிவிட்டதாம். இதனால், அதிருப்தியடைந்த வேல்முருகன், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறக்கூடும் என்றும், இன்னும் சற்றுநேரத்தில் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
ஹெல்மெட் சின்னத்துடன் தயாராகிறதா ராமதாஸ் தரப்பு?

அப்பா – மகன் மோதலில் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்பட்டால், அன்புமணி தரப்பு இரட்டை இலை (அ) தாமரை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வடமாவட்டங்களில் பாஜக காலூன்றும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், ’அய்யா பாமக’ என்ற பெயரில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட ராமதாஸ் தரப்பு தயாராகவுள்ளதாகவும் தைலாபுர வட்டாரங்கள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


