News January 23, 2025
முதல்வர் சொல்லப் போகும் குட் நியூஸ் இதுதான்

தமிழர் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானதும் அறிவார்ந்ததும் என தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் வெண்கல காலம் நடைபெற்றபோதே, தமிழர் நாகரிகத்தில் இரும்பு காலம் தொடங்கிவிட்டதாக கார்பன் டேட்டிங் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதைதான் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
Similar News
News January 4, 2026
திமுக முக்கிய தலைவர் காலமானார்: ஸ்டாலின் இரங்கல்

2 முறை MP, 2 முறை MLA பதவிகளில் இருந்த திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் காலமானார். இந்நிலையில், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய அவர் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
News January 4, 2026
உங்கள் உடலில் சிறிய எலும்பு எது தெரியுமா?

★வளர்ந்த மனிதரின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன ★10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பு செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன ★பாதங்களில் 26, கைகளில் (மணிக்கட்டுகள் உள்பட) 54 எலும்புகள் உள்ளன ★மிக நீளமான, மிக வலுவான எலும்பு தொடை எலும்பு (femur) ★உடலின் மிகச்சிறிய எலும்பு, காதில் உள்ள ‘ஸ்டேப்ஸ்’ எலும்பு ★மற்றொரு எலும்புடன் தொடர்பில்லாத ஒரே எலும்பு நாக்கின் அடியில் காணப்படும் V வடிவ hyoid எலும்பு.
News January 4, 2026
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன கிடைக்கும்?

பொங்கல் பரிசில் ₹3,000 ரொக்க பணத்தோடு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, வேட்டி & சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளன. இவை அனைத்தும் பொங்கலுக்கு முன்பாக நியாயவிலை கடைகள் வழியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளது. இன்று முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று நீங்கள் பெற்றலாம்.


