News March 25, 2025
குஜராத் அணிக்கு இதுதான் இலக்கு…!

குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 97 ரன்கள் குவித்தார். குஜராத் அணி தரப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எந்த அணி வெல்லும்? உங்கள் கணிப்பு என்ன?
Similar News
News March 26, 2025
நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை!

நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பக்தர்களை வெளியேற்ற ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ராஜபாளையம் அருகே இரு வேறு இடங்களில் நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, நித்தியானந்தா தலைமறைவு குற்றவாளி. அவர் தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.
News March 26, 2025
சிங்கம் இருக்க நீ போய் விட்டாயா? வைரமுத்து உருக்கம்!

மாரடைப்பின் காரணமாக காலமான, நடிகர் மனோஜ் பாரதிராஜாவுக்கு திரைத்துறையினர் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா என உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே… சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா… உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
News March 26, 2025
29 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 29 ஆம் தேதி(சனிக்கிழமை) வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தெலுங்கு வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 மற்றும் 31 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறையாகும். வழக்கமாக மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவுப் பணிகள் நடைபெறும். இதனால் 29ஆம் தேதி பொருட்கள் வழங்கப்படுமா என்ற ஐயம் எழுந்த நிலையில், ரேஷன் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.