News January 24, 2025
விஜய் கொடுத்த நாணயம் இதுதான்

தவெகவின் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு விஜய், வெள்ளி நாணயம் வழங்கியுள்ளார். நாணயத்தின் ஒரு புறத்தில் விஜய்யின் உருவத்துடன் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதப்பட்டுள்ளது. மற்றொரு புறத்தில் கட்சி பெயருடன் தவெகவின் வாசகமான பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் மற்றும் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள செங்காந்தள் மலர் மற்றும் யானை ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.
Similar News
News November 22, 2025
இனி ஓராண்டு வேலை செய்தாலே Gratuity!

ஊழியர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் வேலை செய்தால், அவருக்கு Gratuity எனும் சிறப்பு பணத்தொகுப்பு வழங்கப்படும். இந்த விதியை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி, ஊழியர் ஓராண்டு வேலை செய்தாலே Gratuity வழங்கப்பட வேண்டும் என்ற விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
BREAKING: திமுகவில் இருந்து நீக்கம்

திருவள்ளூர் தொகுதி திமுக MLA வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான VS நேதாஜி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
News November 22, 2025
பட்டாம்பூச்சி போல் சிறகு விரித்து பறக்கும் டெல்லி

டெல்லி என்றாலே காற்று மாசு பிரச்னைதான் பலருக்கு ஞாபகம் வரும். ஆனால் அதையும் தாண்டி நம் மனதில் நிற்கும் ஒரு போட்டோவை நாசா வெளியிட்டுள்ளது. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அது, பட்டாம்பூச்சி சிறகு விரித்து பறப்பது போல் காட்சியளிக்கிறது. பளிச்சென்று எரியும் மின்விளக்குகள், அதற்கு மத்தியில் ஓடும் யமுனை என டெல்லியின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


