News September 1, 2024

வீரர்களின் தடுமாற்றத்திற்கு இதுதான் காரணம்!

image

இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னிற்கு சாதகமான பிட்ச்களில் திணறுவதற்கு BCCI நிர்வாகமும் முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் சுழலக் கூடிய மோசமான பிட்ச்களில் இந்திய அணி அதிகம் விளையாடி இருக்கிறது. இது பேட்ஸ்மேன்களின் மன உறுதியை குறைத்துள்ளது. அணி நிர்வாகம் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News July 9, 2025

நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

image

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.

News July 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 390 ▶குறள்: கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. ▶ பொருள்: கொடுத்தலும், முகமலர்ந்து பேசுதலும், முறைசெய்தலும், குடிகளைக் காத்தலும் ஆகிய இந்நான்கும் உடையவன் வேந்தர்களுக்கெல்லாம் விளக்காவான்.

News July 9, 2025

’ஆந்திராவில் காவி வேஷ்டி, தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி’

image

பவன் கல்யாணுக்கு பைத்தியம் பிடித்திருப்பதாக ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா விமர்சித்துள்ளார். அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர்கள் மாநாட்டில் பவன்கல்யாண் பங்கேற்றிருந்தார். இது தொடர்பாக பேசிய ரோஜா, ஆந்திரா வந்தால் காவி வேஷ்டி, தமிழ்நாட்டுக்கு சென்றால் பச்சை வேஷ்டி அவர் உடுத்திக் கொள்வதாகவும், திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் அவர் பேசுவதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!