News February 16, 2025
எடை குறைய இப்படி செய்வதே நல்லது

எடை குறைப்பிற்கு வெறும் வயிற்றில் வாக்கிங் செல்வதே நல்லது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். வெறும் வயிற்றில் வாக்கிங் செல்லும் போது, உடல் தனது சக்திக்கு கொழுப்பை கரைத்து எடுத்துக் கொள்ளும் என்பதால், வேகமாக எடைக் குறையும் எனவும், இதன் பெயர் Fasting Cardio என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோல், சுகர், BP உள்ளவர்கள் டாக்டர்களிடம் அறிவுரை பெற்று இதை செய்யவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News September 12, 2025
உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.
News September 12, 2025
பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.
News September 12, 2025
Cinema Roundup: ‘காந்தா’ ரிலீஸ் ஒத்திவைப்பு

* ‘இட்லி கடை’ படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். * இந்த வாரம் ரிலீசாக வேண்டிய துல்கர் சல்மானின் ‘காந்தா’ திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. * கவினின் ‘கிஸ்’ படத்தில் இருந்து 3வது பாடல் வெளியாகியுள்ளது. * LCU படமான பென்ஸில் சம்யுக்தா மேனன் நடிக்கிறார். * லோகேஷ் கனகராஜ் – அமீர் கான் இணைந்து பணியாற்றவிருந்த சூப்பர்ஹீரோ படம் கைவிடப்பட்டதாக தகவல்.