News June 17, 2024

தமிழ்நாட்டிலேயே இதுதான் சிறந்த பள்ளிக்கூடம்

image

இங்கிலாந்தை சேர்ந்த அமைப்பு ஒன்று, உலகளவில் மிகச்சிறந்த கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை தேர்வு செய்து பரிசளித்து வருகிறது. அந்த வகையில், சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், புதுமை, துன்பங்களை சமாளித்தல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் இந்தியாவிலிருந்து 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலிருந்து கல்வி இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் (மதுரை ) தேர்வாகியுள்ளது.

Similar News

News April 4, 2026

திங்கள்கிழமை பள்ளிகள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்.7 முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது, மாணவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (திங்கள்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது. மாணவர்களே விடுமுறையை என்ஜாய் பண்ணுங்க. SHARE IT

News April 4, 2026

மத்திய அரசு கொடுத்த நிதி எங்கே? பியூஷ் கோயல்

image

திமுக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய வெள்ளை அறிக்கையை சென்னையில் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் கடன் சுமையும், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசமும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். திமுக அரசின் தவறான நடவடிக்கைகளால் தமிழ்நாடு நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், மத்திய அரசு கொடுக்கும் GST நிதி எங்கு செல்கிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 4, 2026

எண்ணெய் கப்பல் சீனாவிற்கு சென்றதா… மத்திய அரசு பதில்!

image

குஜராத் நோக்கி வந்த ஈரானிய எண்ணெய் கப்பல், சீனாவிற்கு திருப்பிவிடப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. முன்கூட்டியே பணம் செலுத்தாததால் 6 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் வந்த ‘பிங் ஷுன்’ கப்பல் சீனாவின் டாங்யிங் துறைமுகத்தை நோக்கி செல்வதாக கூறப்பட்டது. இதனை மறுத்துள்ள அரசு, ஈரானிய எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் தடைகள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!