News March 11, 2025
ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த ஏர்போர்ட் இதுதான்…!

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விமான நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் 40 மில்லியன் பயணிகளை கையாளும் பிரிவில் சிறந்த விமான நிலையமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது. இதே பிரிவில், 2018 முதல் 2023ம் ஆண்டு வரை 6 முறை இந்த விமான நிலையத்திற்கு விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2025
ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரிய மின்சார வாரியம்!

மின் மீட்டர் அமைப்பதற்கான 2ஆவது டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி நிறுவனம் பெற்ற டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. 6 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் நிறுவ இம்முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதம் ஒருமுறை மின் கட்டண கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக அமைச்சர் கூறியிருந்தார்.
News March 12, 2025
டெல்லியில் புதிய சேவை அறிமுகம்

டெல்லியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், படகு சவாரி அறிமுகம் செய்யும் திட்டம் கையெழுத்தாகியுள்ளது. முதற்கட்டமாக சோனியா விகார் – ஜகத்பூர் இடையே 4 கி.மீ. தூரத்துக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை இது கொடுக்கும் என டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா தெரிவித்துள்ளார். அதேபோல் டெல்லிக்கு படகு சவாரி புதிய அடையாளத்தை கொடுக்கும் என முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
News March 12, 2025
ரூ.5 கோடி எம்மாத்திரம்…ரூ.18 கோடி கொடுங்கள்: சுப்பராயன்

நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும் என சிபிஐ MP சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ரூ.3 கோடி தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவதாகவும், ஆனால் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதிக்கு வெறும் ரூ.5 கோடி நிதி வழங்குவது போதாது எனவும் கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.