News April 11, 2024
திமுக, அதிமுக செய்த சாதனை இதுதான்

திமுக, அதிமுக ஆட்சியில் செய்த சாதனை மக்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதுதான் என அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். திமுக தோல்வியடைந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என்றார். மேலும், சேலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.
Similar News
News January 18, 2026
கண்டுபிடி..! கண்டுபிடி..!

உங்கள் கண்களுக்கு ஒரு டெஸ்ட். இந்த புகைப்படத்தில் காணப்படும் வட்டங்களில், எத்தனை வட்டங்களில் கருப்பு புள்ளிகள் உள்ளன என கரெக்ட்டா சொல்லுங்க பார்ப்போம்? இதற்கான விடையை சரியாக கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஒரு ஜீனியஸ்தான். இந்த புதிரை உங்கள் நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிர்ந்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள். அப்புறம் என்ன.. ஆரம்பிக்கலாங்களா?
News January 18, 2026
சற்றுமுன்: ஈரானில் 3,090 பேர் பலி!

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளது. அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை 75% வரை உயர்ந்துள்ளன. மன்னராட்சிக்கும் மத குருமார்கள் ஆட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாக இந்தப் போராட்டம் மாறிவருகிறது. இதனிடையே ஈரானில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு முழு காரணம் டிரம்ப் எனவும் அவர் குற்றவாளி என்றும் <<18885675>>கமேனி<<>> தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
மாதவிடாய் காலத்தில் ரத்த தானம் செய்யலாமா?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்வது தொடர்பான அச்சங்கள் கட்டுக்கதைகளே என டாக்டர்கள் விளக்குகின்றனர். *இது முற்றிலும் பாதுகாப்பானது *தானம் செய்யும் ரத்தம் வேறு, மாதவிடாய் ரத்தம் வேறு. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது *ரத்த தானம் அளிக்க ஹீமோகுளோபின் 12.5g/dL-க்கு மேல் இருக்க வேண்டும் *ரத்த தானம் செய்தால் Cramps அதிகமாகாது. ஆனால், Cramps, ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தானத்தை தவிர்க்கலாம்.


