News March 26, 2025
அதிமுக கேட்ட கணக்கு இதுதான்…!

1972-ல் திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என திமுக பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இது திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததே அதிமுக என்ற கட்சி தோன்ற காரணமாக அமைந்தது.
Similar News
News November 25, 2025
விஜய்க்கு ஆதரவு.. வெளிப்படையாக அறிவித்தார்

விஜய் அழைத்தால் தவெகவிற்காக பேச செல்வேன் என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுகவை விட தவெக வலிமையாக உள்ளது. இதனால், பல தொகுதிகளில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி நிலவும் எனக் கூறிய அவர், களநிலவரமும் அப்படித்தான் இருக்கிறது என்றார். மேலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேசமாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
காலையில் கட்டாயம் சாப்பிடக்கூடாதவை

சுமார் 10 மணிநேர இடைவெளிக்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் சில காலை உணவுகளால் நமக்கு உடல்நலம், மனச்சோர்வு போன்றவை உண்டாகின்றன. எனவே,
*வறுத்த உணவுகள்
*தயிர்
*டீ, காபி போன்ற சர்க்கரை பானங்கள்
*ஃப்ரிட்ஜில் வைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்
*எனர்ஜி டிரிங்ஸ் *தயிர் ஆகியவற்றை காலை உணவில் இருந்து தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் நலம் விரும்பும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 25, 2025
அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி

நவ.27-ல் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் DCM உதயநிதி. இந்நிலையில், திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதல்முறையாக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடவுள்ளாராம். அன்றைய தினம் சுமார் 50,000 தொண்டர்கள் நேரடியாக உதயநிதிக்கு வாழ்த்து கூறவுள்ளனராம். கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடவுள்ள உதயநிதியை, 2026 தேர்தலில் முக்கிய முகமாக மாற்ற திமுக முயற்சிக்கும் என்கின்றனர்.


