News July 24, 2024

இது வரிவிதிப்பல்ல… ‘TaxTerrorism’

image

மத்திய அரசின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, LTCG & STCG வரியை உயர்த்தியது & குறியீட்டு பலன்கள் நீக்கியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் எதிர்ப்பை ‘TaxTerrorism’ என்ற ஹேஷ்டேக்குடன் X தளத்தில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். குறியீட்டு பலன் நீக்கம் சொத்து விற்பனையாளர்களுக்கு வரி சுமை அதிகரிக்க வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 12, 2026

விஜய்யை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர் யார்?

image

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிட போவதாக தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளரை தேடும் வேட்டையில் திமுக இறங்கியுள்ளதாம். அதன்படி வடசென்னையில் பலமாக உள்ள சேகர்பாபு பெரம்பூரிலும், கிறிஸ்துவ சமயத்தை சேர்ந்த இனிகோ ருதயராஜை திருச்சி கிழக்கிலும் வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News March 12, 2026

PM மோடிக்கு தமிழகத்துடன் தொப்புள் கொடி உறவு: TTV

image

திருச்சி பொதுக்கூட்டத்தில் TTV தினகரன் பேசியது கவனம் பெற்றுள்ளது. PM மோடி டெல்லியில் இருந்து ஆட்சி செய்தாலும், அவர் குஜராத்தை சேர்ந்தவர்; குஜராத் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துடன் தொடர்பு கொண்ட நிலம் என்றார். பாரி, அதியமான் போன்ற வேளிர் இனத்தை சேர்ந்த திராவிட மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியை சேர்ந்தவர் மோடி எனவும், TN-க்கும், PM மோடிக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

News March 12, 2026

WhatsApp-ல் குழந்தைகளுக்காக புது வசதி!

image

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அக்கவுண்ட்களை பெற்றோர் மேற்பார்வையிடும் வசதியை WhatsApp அறிமுகம் செய்துள்ளது. குழந்தைகளின் WhatsApp அக்கவுண்ட் உடன் QR மூலம் பெற்றோர்கள், தங்கள் அக்கவுண்ட்டையும் இணைக்கலாம். அப்போது பெற்றோர்களுக்கு 6 இலக்க PIN கிடைக்கும். இதன்மூலம், குழந்தைகளின் Chat-ல் ஒருவரை சேர்ப்பது, தடை செய்வது ஆகியவற்றை பெற்றோர்களே செய்யலாம். குழந்தைகள் Calls & Messages மட்டுமே செய்ய முடியும்.

error: Content is protected !!