News December 7, 2024
இது விஜய்க்கு நல்லதல்ல: இயக்குநர் அமீர் எச்சரிக்கை

விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்திருந்த நிலையில், இதுதொடர்பாக அமீர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்கும் நன்மை தராது. ஆதவ் அர்ஜுனா நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல. பிறப்பாலும், பணக்காரர்களின் வாரிசுகளை மணப்பதாலும் ஒருவரால் பணக்காரராக முடியும். ஆனால், மக்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார்.
Similar News
News August 25, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17510524>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. மத்திய பிரதேசம்.
2. தொடை எலும்பு (Femur)
3.1982
4. அரசமரம்
5. சாய்னா நேவால் (2012)
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?
News August 25, 2025
விஜய் மீது மிக அசிங்கமான தாக்குதல்.. கேட்கவே காது கூசுது

ஸ்டாலினை ‘அங்கிள்’ எனக் கூறியதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, விஜய்யை நடிகைகளுடன் இணைத்து பேசி, திமுக MLA கே.பி.சங்கர் அநாகரிகமாக விமர்சித்துள்ளார். விஜய்க்கு த்ரிஷா கூட போலாமா, கீர்த்தி சுரேஷ் கூட போலாமா என்றுதான் தெரியும். மக்களின் கஷ்ட நஷ்டங்கள் எதுவும் தெரியாது; ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால், துணியை உருவி ஓட விட்டிருப்பார் என்று மோசமாக பேசியுள்ளார்.
News August 25, 2025
ஆம்புலன்ஸ் தாக்குதலுக்கு EPS தான் காரணம்: எழிலன்

இபிஎஸ் பொறுப்பின்றி பேசியதால் தான் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கியதாக திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம் என கேட்ட அவர், EPS பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்தவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் தான் ஆம்புலன்ஸ் அங்கு சென்றது எனவும் தெரிவித்துள்ளார்.