News February 17, 2025

இதெல்லாம் கிரிமினல் குற்றம் இல்லை: சுப்ரீம் கோர்ட்

image

பணியிடங்களில் தலைமை அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழியர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்ய வேண்டும் என தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் எதிர்பார்ப்பது நியாயமானது தான் எனக் குறிப்பிட்ட SC, சீனியர்கள் அதிகாரிகளின் அறிவுரை, பணியிடத்தில் ஒழுக்கம், கடமையை செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது என விளக்கமளித்துள்ளது.

Similar News

News November 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 533 ▶குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ▶பொருள்: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.

News November 28, 2025

Gen Z தலைமுறையை நெகிழ்ந்து பாராட்டிய PM மோடி

image

இந்திய இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவன வளாகத்தை திறந்து வைத்து பேசிய அவர், இன்று Gen Z பொறியளார்கள், வடிவமைப்பாளர்கள், Coding பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள், ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் ஆகியவற்றிலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.

News November 28, 2025

தோனியும் பவுமாவும் ஒன்று: ஏபி டி வில்லியர்ஸ்

image

தோனியின் கேப்டன்சி பற்றி SA வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியது வைரலாகிறது. கேப்டன்சியை கையாள்வதை பொறுத்தவரை டெம்பா பவுமா, தோனியை போன்றவர் என அவர் கூறியுள்ளார். தோனி எப்படி அமைதியாகவும், அதிகம் பேசாதவராகவும், அவர் பேசும்போது அணியின் வீரர்கள் எப்படி கவனிப்பார்களோ, அப்படித்தான் பவுமாவும் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளார். தோனியின் பெஸ்ட் கேப்டன்சி மொமண்ட் எது?

error: Content is protected !!