News March 19, 2025
இதுதான் எனது ஒரே இலக்கு: ஸ்ரேயஸ் ஐயர்

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் டிராஃபியை வெல்வதே தனது இலக்கு என ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “பஞ்சாப் அணி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. அவர்களுக்கு கோப்பையை வென்று கொடுப்பதுதான் என்னுடைய ஒரே இலக்கு. அது ஒரு இமாலய சாதனையாக இருக்கும். சீசன் முடிவில் ஒரு பஞ்சாபி கொண்டாட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 19, 2025
ஒரே மரம்.. ஏராளமான பயன்கள்!

*முருங்கைக் காய் – உடலுக்கு வலிமை தரும் சத்தான காய்.
*முருங்கை இலை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் கை, கால், மூட்டு வலிகள் நீங்கும்.
*முருங்கைப் பட்டையில் உலோகச் சத்து நிறைந்துள்ளதால் நரம்புக் கோளாறுகளை சரிசெய்யும்.
*முருங்கை விதை கூட்டு மூளைக்கு பலம் தரும்.
*முருங்கைப் பூ ரத்தத்தை சுத்தம் செய்யும். எலும்புகளை வலுவாக்கும்.
News March 19, 2025
மீண்டும் ஒன்று சேர்ந்த அதிமுக.. கழ(ல)கத்தில் மாறிய காட்சிகள்!

2 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று EPS, OPS கார்கள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்தன. அதோடு, பேரவைக்குள் செங்கோட்டையன் பேச வாய்ப்பளிக்க கோரி சபாநாயகருக்கு இபிஎஸ் சைகை காண்பித்தது, பேரவை உணவகத்தில் அதிமுக MLAக்களுடன் அமர்ந்து செங்கோட்டையன் உணவருந்தியது என உள்கட்சி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 19, 2025
அறிவிக்காமல் விவாதிக்க முடியுமா? வானதி

மத்திய அரசு அறிவிப்பு வெளியிடாத நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் எப்படி விவாதிக்க முடியும் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவினர் தங்களது கற்பனை மூலம் உருவாக்கிய சிந்தனையை விவாதிக்க முடியுமா என வினவிய அவர், தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்கக் கோரி திமுக MPக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.