News March 5, 2025
சாதனையை விட இதுதான் முக்கியம்: கோலி

சாதனை படைப்பதை விட அணி வெல்வதே முக்கியம் என கோலி தெரிவித்துள்ளார். AUSக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய அவர், இந்த போட்டியில் சதம் அடித்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும், ஆனால், அதை விட அணி வெல்வதே முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார். மேலும், சதத்தை தவற விட்டது தனக்கு வருத்தமில்லை எனவும், தனிப்பட்ட சாதனைகளை தான் எப்போதுமே யோசித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2025
காபி குடிச்சதும் தண்ணீர் குடிக்கிறீங்களா?

காபி குடித்ததும், தண்ணீர் குடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. காபி குடித்த பிறகு நாக்கில் சுவை மொட்டுகளில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுவதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால், இதனால் சில பிரச்னைகள் உண்டாகும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி பருகுவதால் செரிமான பிரச்னைகள் உண்டாகலாம் *வயிற்றில் வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றில் உப்புசம் ஏற்படலாம். SHARE IT.
News March 5, 2025
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சீமான்

எஸ்.டி.பி.ஐ தலைவர் ஃபைசி கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் விமர்சித்துள்ளார். தன்னாட்சி அமைப்புக்களைத் தனது கைப்பாவையாக்கி, மத்திய அரசு அரசியல் எதிரிகளை தொடர்ந்து பழி வாங்குவதாகவும், இது நாட்டை பேரழிவை நோக்கிக் கொண்டு செல்லும் எனவும் அவர் சாடியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஃபைசியை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.
News March 5, 2025
காய்கறிகள் விலை கடும் சரிவு.. விவசாயிகள் கவலை!

காய்கறிகள் விலை கடந்த ஒரு வாரத்தில் தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் இன்று(மார்ச் 5) ஒரு கிலோ தக்காளி- ₹12, பீட்ரூட்-₹10, கத்திரிக்காய்- ₹10, கேரட்- ₹15 – ₹30, முருங்கைக்காய்- ₹40, சின்ன வெங்காயம்- ₹18 – ₹25க்கு விற்பனையாகிறது. மேட்டுப்பாளையம் மொத்த சந்தையிலேயே ஒரு கிலோ பூண்டு ₹60 – ₹100ஆக குறைந்துள்ளது. இந்த விலை குறைவு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.