News April 23, 2025

விருதுகளை விட இதுதான் முக்கியம்: சாய் பல்லவி

image

குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், விருதுகள் கிடைப்பதை விட ரசிகர்களின் அன்பை பெறுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திரையரங்கில் தனது கதாபாத்திரங்களை கண்டு அந்த எமோஷனுடன் ரசிகர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையே உண்மையான வெற்றியாக பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 17, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 491 ▶குறள்: தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. ▶பொருள்: ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

News October 17, 2025

‘டெஸ்ட் 20’: கிரிக்கெட்டில் புது ஃபார்மெட் உதயமானது!

image

டெஸ்ட் + டி20-ஐ இணைத்து ‘டெஸ்ட் 20’ என்ற ஒரு புதிய ஃபார்மெட் உதயமாகியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா 20 ஓவர்களுக்கு 2 இன்னிங்ஸ் விளையாடுவர். டெஸ்ட் போலவே 2 முறை பேட்டிங், பவுலிங் செய்வர். 2026 ஜனவரியில் ‘ஜூனியர் டெஸ்ட் 20 சாம்பியன்ஷிப்’ சீசன் தொடங்க உள்ளதாக இந்த ஃபார்மெட்டை உருவாக்கிய கவுரவ் பஹிர்வானி தெரிவித்துள்ளார். ஏபி டிவில்லியர்ஸ், க்ளைவ் லியாட், ஹெய்டன், ஹர்பஜன் இதன் ஆலோசகர்களாக உள்ளனர்.

News October 17, 2025

‘Bahubali: The Epic’ படத்தின் முன்பதிவு வசூல் இவ்வளவா?

image

‘பாகுபலி’ படங்களின் 2 பாகங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள ‘Bahubali: The Epic’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை $60,000 (இந்திய மதிப்பில் ₹52.78 லட்சம்) வரை முன்பதிவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

error: Content is protected !!