News April 10, 2025

கோலியின் ஃபேவரட் எதிரணி இதுதான்!

image

பெங்களூருவில் CSK vs RCB மோதும் போட்டிகள் தான், IPL வரலாற்றில் தான் எதிர்கொண்ட படு உற்சாகமான மற்றும் பரபரப்பு மிக்க போட்டிகள் என கோலி தெரிவித்துள்ளார். பெங்களூரு மைதானத்தில் RCB-க்கு இணையாக CSK ரசிகர்களும் நிரம்பியிருப்பார்கள் எனவும், இது பதற்றத்தையும், உற்சாகத்தையும் ஒருசேரக் கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். IPL-ல் எதிர்கொண்ட கடுமையான போட்டி எது என்ற கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Similar News

News October 21, 2025

தீவிரமடையும் பருவமழை: CM ஸ்டாலின் அவசர ஆலோசனை

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை வெளுத்து வாங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை பணிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.

News October 21, 2025

தொழுகை செய்த இடத்தை சாணத்தால் சுத்தம் செய்த BJP

image

புனேவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Shaniwar Wada கோட்டை, மராத்திய கூட்டமைப்பின் தலைமையகமாக செயல்பட்டது. இந்நிலையில், இங்கு இஸ்லாமியர்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்ட வீடியோ சமீபத்தில் வைரலானது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்யசபா MP மேதா குல்கர்னி தலைமையிலான பாஜகவினர், புனிதத்தன்மையை மீட்கும் நோக்கில் தொழுகை செய்த இடத்தை பசு சிறுநீர் (கோமியம்) & சாணத்தை கொண்டு சுத்தம் செய்தனர்.

News October 21, 2025

BREAKING: கூட்டணிக்கு வர விஜய்க்கு அழைப்பு விடுத்தார்

image

DMK மீண்டும் ஆட்சிக்கு வந்தால் TVK-வை ஆண்டவன் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது என RB உதயகுமார் கூறியுள்ளார். ராட்சத பலம் கொண்ட DMK-வை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் எனவும் வெளிப்படையாக விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், AP-ல் நடிகர் பவன் கல்யாண், சரியான முடிவு எடுத்ததால்தான் துணை முதல்வராக இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, TVK-வை NDA-வில் இணைக்க <<18061640>>பேச்சுவார்த்தை<<>> நடப்பதாக தகவல் வெளியானது.

error: Content is protected !!