News April 18, 2025
இது ஆரம்பம் தான்.. இனிதான் அபாயம் இருக்கு.. சு.வெ

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது, இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் முயற்சிப்பதாக கூறிய அவர், எதிர்காலத்தில் கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் சொத்துக்களையும் கைப்பற்றும் அபாயகரமான ஆரம்பமாகவும் இச்சட்டம் உள்ளது என விமர்சித்தார்.
Similar News
News April 19, 2025
மதிமுகவில் இருந்து துரை வைகோ விலகல்!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
News April 19, 2025
திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும்: எல்.முருகன்

திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் நேற்று பேசிய CM ஸ்டாலின், எந்த ஷா வந்தாலும் TNல் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில், 2026-ல் திமுகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என எல்.முருகன் பதிலளித்துள்ளார். NDA கூட்டணி பெரிதாக சாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ₹1,300, விளமீன், ஊளி மீன், பாறை மீன், நண்டு ஆகியவை தலா ₹600, கீழவாளை, பண்டாரி, தம்பா மீன்கள் தலா ₹300 – ₹600 வரை விற்பனையாகிறது. ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தென் மாவட்டங்களில் சில்லறை விலையில் 1 கிலோவுக்கு ₹50 – ₹100 வரை அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் ஒரு கிலோ மீன் விலை என்ன?