News February 24, 2025
துளசியை இப்படிதான் வழிபட வேண்டும்

கடவுளுக்கு உகந்த செடியான துளசியினை வழிபடுவதற்கு சில முறைகள் உள்ளன. (1) துளசியை வீட்டில் வெயில்படும், சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும் (2) தினமும் காலை குளித்துவிட்டு துளசியின் முன் விளக்கு, ஊதுபத்தி ஏற்றலாம் (3) மந்திரங்களை ஓதியபடி துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் (4) துளசிக்கு பூக்களை தூவி பூஜை செய்யலாம் (5) அசுத்தமான கைகளால் துளசி செடியை தொட வேண்டாம்.
Similar News
News February 24, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம் ▶சுயவிமரிசனம் உடையோரை, பிற விமரிசனங்கள் பாதிப்பதில்லை. ▶வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லேதான், ஆனா நரகமா வாழ்க்கை ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்.
News February 24, 2025
விமர்சித்தால் கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் முன்னணி தலைவர்களை கட்சியினர் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, பொதுவெளியில் கருத்து தெரிவிப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார். தன் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளவும், எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 24, 2025
ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசா அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.