News October 21, 2024
அயோத்தி வழக்கில் இப்படிதான் தீர்ப்பு வழங்கப்பட்டது!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக கடவுளிடம் வேண்டியதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். முடிவுக்கு வர முடியாத வழக்குகள் அடிக்கடி வருவதுண்டு எனவும், தன் முன் 3 மாதங்களாக இருந்த அயோத்தி வழக்கிற்கு தீர்வு வேண்டும் என தெய்வத்தின் முன் அமர்ந்து கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நம்பிக்கை இருந்தால் கடவுள் நல்ல வழியை காட்டுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
தமிழ்நாட்டில் அமானுஷ்ய நடமாட்டம் உள்ள 10 இடங்கள்

தமிழ்நாட்டில் இந்த 10 இடங்களில் மர்மமான அலறல்கள், மாய உருவங்கள், விவரிக்க முடியாத உணர்வு, தற்கொலைகள் என அமானுஷ்ய நடமாட்டங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது: *டிமான்ட்டி காலனி *பெசன்ட் கார்டன் *புரோக்கன் பிரிட்ஜ் *வால்மீகி நகர் *பெசன்ட் அவென்யூ ரோட் *ECR சாலை *கரிகாட்டுக் குப்பம் *சென்னை கிறிஸ்தவ கல்லூரி (ஒரு அறை) *புளூகிராஸ் ரோடு *திருவண்ணாமலை ஹாண்டட் ஹவுஸ். உங்கள் ஊரில் இப்படிப்பட்ட இடங்கள் இருக்கா?
News July 5, 2025
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.
News July 5, 2025
இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் டார்கெட்

2-வது டெஸ்டில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது. 2-வது இன்னிங்சில் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். இதனால் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கை போல் அதிரடியாக இருந்தால் வெற்றி நமதே.