News November 25, 2024
மாணவர்களுக்கு இப்படிதான் அகமதிப்பீடு வழங்கப்படும்

தமிழகத்தில் +1 & +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதன்படி, 81 – 100% வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும் 75 – 80% வருகைப் பதிவேடு இருந்தால் ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 12, 2026
வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிறு) தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது, நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், 28-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்.
News January 12, 2026
கரூர் துயரத்திற்கு காரணம் இதுதான்.. விஜய்

கரூர் துயரத்திற்கு தானும், TVK நிர்வாகிகளும் பொறுப்பல்ல என CBI அதிகாரிகளிடம் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையில் பல கேள்விகளுக்கு விஜய் பதிலளித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகவே அங்கிருந்து தான் புறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலுக்கு TN அரசே காரணம் என விஜய் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
News January 12, 2026
இனி டாக்டருக்கு படிக்க தேவையில்லை.. எலான் மஸ்க்

AI-ன் அதிவேக வளர்ச்சி காரணமாக டாக்டருக்கு படிப்பது பயனற்றதாக மாறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. வரும் காலங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களை விட, ரோபோக்கள் சிறப்பாக செயல்படும் என கணித்துள்ளார். மேலும், தற்போது அதிபருக்கு வழங்கப்படும் மருத்துவ சேவையை விட சிறந்த சேவை ஒரு சாமானியருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.


