News November 24, 2024
IPL-ல் இப்படிதான் சம்பளம் வழங்கப்படுகிறது

IPL ஏலத்தில் எந்த தொகைக்கு வீரர் வாங்கப்படுகிறாரோ, அதுவே அவர்களின் அந்த சீசனின் சம்பளமாகும். வரிகள் போக அந்த தொகை நேரடியாக வீரருக்கு வழங்கப்படும். Retain செய்யப்படும் வீரர்களுக்கு, முந்தைய ஏலத்தில் உறுதி செய்யப்பட்ட தொகைதான் சம்பளம். சீசன் தொடங்குவதற்கு முன்பே வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டால், சம்பளம் கிடையாது. போட்டியின் போது காயம் ஏற்பட்டால், வீரரின் மருத்துவ செலவுகளை அணி நிர்வாகம் வழங்கும்.
Similar News
News November 26, 2025
கர்நாடக CM ரேஸில் நியூ என்ட்ரியா?

கர்நாடக CM யார் என சித்தராமையா, டி.கே சிவக்குமாருக்கு இடையே போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த ரேஸில் மேலும் ஒருவர் இணைந்துள்ளனர். அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா வெளிப்படையாகவே தான் CM ரேஸில் இருப்பதாக கூறியுள்ளார். 2013-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியதால், அன்றிலிருந்து இன்றுவரை தான் எப்போதும் CM ரேஸில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.
News November 26, 2025
விஜய்யை நம்பமுடியாது: செல்வப்பெருந்தகை

தவெக உடன் TN காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நம்பி திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளிவர வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த தகவல் உண்மை இல்லை என கூறிய அவர், காங்கிரஸில் இருக்கும் சிலர் சொல்வது கட்டுக்கதை என்றார். மேலும், TN-ல் திமுகவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்., செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


