News April 11, 2024

இது ஜி Pay… திமுக புதிய பிரசார யுக்தி

image

தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுகவினரின் போஸ்டர் பிரசாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. திருப்பூரின் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜி pay என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், Scan செய்யுங்கள் Scam பாருங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் பாஜகவின் ஊழல் என்ற பெயரில் வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.

Similar News

News April 5, 2026

முதல் வெற்றியை பதிவு செய்யுமா CSK?

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL போட்டியில், இன்று CSK -RCB பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான RCB 2-வது வெற்றியை ருசிக்க கடுமையாக போட்டியிடும். அதேநேரம், 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்த CSK, இப்போட்டியில் மீண்டெழ வேண்டும் என்ற கட்டாயத்தில் டஃப் ஃபைட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி பற்றி உங்கள் கணிப்பு என்ன?

News April 5, 2026

அதிமுகவில் இணைந்த தவாக வேட்பாளர்.. வேல்முருகன் ஷாக்!

image

வேப்பனப்பள்ளி தொகுதி தவாக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தி.க.குமார், KP முனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் 200-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தவாக பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேர்தலில் களம் காண்கிறது. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தி.க.குமார் அதிமுகவுக்கு சென்றது வேல்முருகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News April 5, 2026

PM மோடி கட்டுப்பாட்டில் பினராயி: ராகுல் காந்தி

image

கேரள CM பினராயி விஜயன் PM மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், போதைப் பொருள்களின் களஞ்சியமாக கேரளா மாறிவிட்டதாகவும், 75% விவசாயிகள் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், கேரளாவில் இடதுசாரி கூட்டணி மதவாதத்தில் மூழ்கிவிட்டதாகவும், RSS உடன் ரகசிய கூட்டணி அமைத்து இயங்கி வருவதாக கடுமையாக சாடியுள்ளார்.

error: Content is protected !!