News January 25, 2025
பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.
Similar News
News November 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 531 ▶குறள்: இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. ▶பொருள்: மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
News November 26, 2025
‘Secret Deal’ குறித்து மனம் திறந்த DK சிவக்குமார்

கர்நாடக அரசியலில் முதல்வர் பதவிக்கான போட்டி பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை என DK சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை முதல்வராக்க வேண்டும் என கேட்கவில்லை என்றும், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை என்றார்.
News November 26, 2025
400+ சேஸிங்கில் வரலாறு படைக்குமா இந்தியா?

கவுஹாத்தி டெஸ்டில், தெ.ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸில் 260 ரன்களை டிக்ளேர் செய்தது. இதனால் 548 ரன்கள் இலக்குடன் 4-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, இன்றைய நேர முடிவில் 27/2 ரன்கள் எடுத்தது. எனவே, இன்னும் 522 ரன்கள் எடுத்தாலே இந்தியா வெற்றி பெறும். முன்னதாக, டெஸ்டில் ஒரேயொரு முறை (AUS vs ENG – 404 ரன்கள்) மட்டும் 400+ ரன்கள் சேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமா?


