News January 23, 2025
இதுவும் கம்பீர் Era தான்! இதை கவனிச்சீங்களா..

கம்பீர் பயிற்சியாளரான பிறகு, இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்திப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், எதனால் கம்பீர் பயிற்சியாளராக வந்தார். IPL கோப்பை வெற்றி முக்கிய காரணம். அது T20 தொடர். அவர் வருகைக்கு பிறகு, இந்திய அணி T20 போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையும் ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டுமல்லவா!! இதுவும் கம்பீர் Era தான்.
Similar News
News December 2, 2025
கரூர்: பாதிக்கப்பட்டவர்கள் மனு அளிக்கலாம்

கடந்த செப்.27-ல், கரூரில் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையை CBI நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், கரூர் CBI அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணி முதல் நேரடியாக மனு அளிக்கலாம் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். முன்னதாக, தவெக தலைமை நிர்வாகிகளிடம் CBI விசாரணை நடத்தியது.
News December 2, 2025
SELFIE OF THE DAY ❤️

ஓய்வு பெற்று விட்டாலும், உலக கிரிக்கெட்டின் முக்கிய ஸ்டாராகவே தோனி திகழ்கிறார். அவரின் ஒரு போட்டோ வெளியானாலும், அன்றைய தினம் அதுதான் ட்ரெண்டிங். பெங்களூருவில் நடைபெற்ற கின்லே நிறுவனத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவர் எடுத்து Selfie வைரலாகி வருகிறது. மீண்டும் ‘தல’ தோனியை கிரவுண்டில் பார்க்க, எப்போது மார்ச் மாதம் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
News December 2, 2025
ரெட் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் IMD ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும், இந்த தாழ்வு மண்டலம் இரவில் சென்னை அருகே வரவிருப்பதால், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.


