News March 22, 2025

ஆர்சிபிக்கு இதுலயும் சோகம்தான்

image

18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முந்தைய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது கொல்கத்தா அணிதான். இதுவரை 34 போட்டிகளில் ஒன்றாக விளையாடிய நிலையில், 20 போட்டிகளில் கொல்கத்தா அணியும், 14 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. இன்று போட்டியில் வெல்லப்போவது யார்? கமெண்ட் பண்ணுங்க

Similar News

News March 23, 2025

‘அச்சமில்லாத முயற்சி’… தியாகிகள் நாளில் PM உருக்கம்!

image

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள், தியாகிகள் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 3 பேரின் உயர்ந்த தியாகத்தை நாடு இன்று நினைவுகூர்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலை, நீதிக்கான அவர்களின் அச்சம் இல்லாத முயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 23, 2025

பஹ்ரைனை பொளந்து கட்டிய இந்தியா.. த்ரிலான வெற்றி

image

FIBA Men’s Asia Cup தகுதிச் சுற்றில் இந்திய அணி பஹ்ரைனை எதிர்கொண்டது. 15 ஆண்டுகளாக பஹ்ரைனிடம் தோல்வியை மட்டும் சந்தித்த இந்தியா, நேற்று வரலாற்றை மாற்றியது. முதல் பாதியில் 39-38 என்று முன்னிலை பெற்ற இந்தியா, 2ஆம் பாதியில் மேலும் அதிரடி காட்டியது. இறுதியில் 81-77 என த்ரிலிங்கான வெற்றி பெற்றது. இதன் மூலம் FIBA Men’s Asia Cupக்கு இந்திய முன்னேறியது.

News March 23, 2025

Credit Card-ஐ க்ளோஸ் செய்தால் CIBIL ஸ்கோர் குறையுமா?

image

Credit Card பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். எனினும், பணத்தை திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் கார்டுகளை Close செய்கின்றனர். இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கார்டை Close செய்வது நிதி நிலைமை சரியில்லை என்பதை குறிப்பதால், CIBIL ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கார்டை Close செய்யும் நிலை வந்தால், மற்றொரு கார்டை வாங்கிய பின், Close பண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!