News March 22, 2025
EB கட்டணம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்

இந்த செயல்பாடுகள் 10% வரை மின் விரயத்தை ஏற்படுத்தும்: *TV-யை ஆஃப் செய்து, Set-top box-ஐ அப்படியே விடுதல் *ரிமோட்டில் மட்டும் off செய்துவிட்டு, ஸ்விட்சை off செய்யாதது *AC remote-ஐ மட்டும் off செய்துவிட்டு, Stabilizer-ஐ அப்படியே விடுதல் *பயன்பாடு இல்லாமல் ஸ்விட்ச் போட்ட நிலையில், போன் சார்ஜர் இருத்தல். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.1000 வரை கூடுதலாக செலவாகிறது.
Similar News
News September 15, 2025
விரைவில் ‘வடசென்னை – 2’: ஐசரி கணேஷ்

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் சிம்பு, சூர்யா படங்களை கையில் வைத்துள்ள வெற்றிமாறன் ‘வடசென்னை’ இயக்க வாய்ப்பில்லை என கூறப்பட்டது. ஆனால் விரைவில் ‘வடசென்னை 2’ படம் உருவாக உள்ளதாக ‘இட்லி கடை’ இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
News September 15, 2025
செப்டம்பர் 15: வரலாற்றில் இன்று

*உலக மக்களாட்சி நாள். *1835 – சார்லஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை தொடங்கினார். *1891 – விடுதலை போராட்ட வீரர் செண்பகராமன் பிறந்த தினம். *1909 – முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள். *1959 – தூர்தர்ஷன் டிவி சேவை டெல்லியில் ஆரம்பமானது. *1981 – தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *1987 – இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
News September 15, 2025
வாக்கு திருட்டு பற்றி விசாரிங்க: முன்னாள் தேர்தல் ஆணையர்

வாக்கு திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை குறை கூறுவதை நிறுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பது மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.