News April 7, 2025
இதெல்லாம் சாதாரணங்க: அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

பெங்களூருவில் இளம் பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் எனப் பலரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், கர்நாடக அமைச்சரான பரமேஷ்வரா, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இப்படியான சம்பவங்கள் நடப்பது சகஜம் தான் என சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஷாக் கொடுத்திருக்கிறார்.
Similar News
News August 30, 2025
‘கருப்பு’ ரிலீஸில் தாமதம்?

சூர்யாவின் ‘கருப்பு’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இன்னும் சில காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜி நினைக்க, இதுவரை எடுத்த காட்சிகள் திருப்தியாக இருப்பதாக கூறி, அதற்கு தயாரிப்பு நிறுவனம் சம்மதிக்கவில்லையாம். இதனால் இழுபறி நீடிக்க, பட ரிலீஸ் கிறிஸ்துமஸுக்கு தள்ளிப்போகலாம் என்கின்றனர்.
News August 30, 2025
RR அணியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட்!

RR அணியின் தலைமை பயிற்சியாளர் பணியில் இருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதாக RR அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 2024-ல் RR அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, அணியில் இருந்து சஞ்சு சாம்சன் விலகுகிறார் என கூறப்படும் நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த திடீர் விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
News August 30, 2025
₹1,000 உரிமைத் தொகை.. உதயநிதி சொன்ன குட் நியூஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலட்சியமின்றி விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனால், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.