News May 7, 2024
இது கொஞ்சம் வித்தியாசமான படம்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வழக்கமான ரஜினி படமாக இருக்காது. சற்று வித்தியாசமான கதையில் இருக்கும் என நடிகர் ராணா கூறியுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் அவர், கோர்ட், போலீஸ் பற்றிய பல கருத்துக்கள் நிறைந்த படமாக இது இருக்கும் என்றார். இப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது.
Similar News
News March 27, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

இன்று தங்கம் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ஷாக் கொடுத்தது. மேலும், ஈரான் மீதான தாக்குதலை கூடுதலாக 10 நாள்களுக்கு (ஏப்.6 வரை) நிறுத்தியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளதாலும், தங்கம் விலை தொடர்ந்து உயரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $71 (இந்திய மதிப்பில் ₹6,723) உயர்ந்து $4,454-க்கு வர்த்தகமாவது குறிப்பிடத்தக்கது.
News March 27, 2026
புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டி

தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். அதிமுக உடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படாத நிலையில் ‘நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்’ என்ற அவர், இம்முறை தன்னுடைய கட்சி 70 தொகுதிகள் வரை போட்டியிடும் என்றார். மேலும், புதிய தமிழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 29-ல் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
பாஜகவின் முதல் வேட்பாளர் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் அறிவித்துள்ளார். கடந்த முறை நெல்லையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை தொகுதியை மாற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. <<-se>>#TNElection2026<<>>


