News April 15, 2025
ஆண்களின் விஸ்வாசத்திற்கு இதுதான் சாம்பிள்..!

ஆண்கள் இவ்வளவு விஸ்வாசமானவர்களா என ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகியுள்ளது. Capital Hair and Beauty என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 75% ஆண்கள் தங்கள் துணையைவிட பார்பருக்கு அதிக விஸ்வாசமாக இருக்கிறார்களாம். காதலியை ஏமாற்றுவதைவிட பார்பரை ஏமாற்றுவதுதான் அதிக குற்ற உணர்ச்சியை கொடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி உங்க கருத்து என்ன?
Similar News
News April 17, 2025
விஜய் டிவி பிரபலத்துக்கு 2-வது திருமணம்.. அசத்தும் ஜோடி

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே 2-வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவுக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
News April 16, 2025
கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம்

DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.
News April 16, 2025
நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்

2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.